April 6, 2018

Other Sub Events

Report on Sub – Events Conducted during the year 2018 to till date :
1. பொங்கல் விழா-2018
புத்தாண்டின் முதல் விழாவாகபொங்கல் விழா 2018ம் ஆண்டு சனவரி 7ம் நாள்கிண்டி பொறியியற் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ( AACEG) மற்றும் மாதவம்” – மாணவர் தமிழ்வளர் மன்றம் இணைந்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை 9 மணியளவில் இந்நாள் மற்றும்முன்னாள் மாணவர்கள்சங்க கட்டிடத்தின் முன் சங்கமித்தனர். வெண்மை வேட்டிகள் கண்ணை பறிக்கபட்டுப் புடவைகள் கன்னத்தில் பட்டுத் தெறிக்க, வாசலிலே வண்ணக் கோலமிட்டுஅலங்காரப் பந்தலிட்டுஇனிப்பு கொடுத்துஇனிய சொற்களால் ,விழாவை சிறப்பிக்க வந்தவர்கள்  சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.புதுப்பானை, புத்தரிசி,புதுப்புடவை உடுத்தி செங்கல் அடுப்பில் பொங்கல் வைத்தனர் மாணவியர்,கௌசல்யா, பொன்லட்சுமி, லோகநாயகி.“பொங்கல் பொங்கியதும் “பொங்கலோ பொங்கல்” என அனைவரும் மகிழ்ச்சியுடன் உரக்க கூறபொங்கியது பொங்கல் மட்டுமல்லமனங்களும் கூடத்தான். வெட்டவெளியில் மாணவி பிரின்சியின் நளினமான நடனம் கண்ணையும் மனதையும் கவர்ந்தது. தமிழரின் வீர விளையாட்டான சிலம்பம் மாணவர் கௌசிக் அவர்களின் கைகளில் சீறி பாய்ந்தது. முன்னாள் மாணவர் இரவீந்திரன் அவர்களும்தான் கற்ற சிலம்பத்தை விளையாடி காண்பித்தார். வேடிக்கை பார்த்தவர்கள் விரைந்தார்கள்;பொங்கல் விழாவிற்கு வந்தவர்களுக்குஇனிப்பு பொங்கல் அன்புடன் கொடுக்கப்பட்டது. விழாவை விறுவிறுப்பாக்க போட்டிகள் நடந்தன.கரும்பு உடைக்கும் போட்டி, கரும்பு உரிக்கும் போட்டிகரும்பை  துண்டாக்கிதுண்டுகளை பற்களால் உரித்தனர்.வெண்மையானது கரும்பு மட்டுமல்ல, பற்களும்கூடத்தான்.நீர் நிரப்பும் போட்டி

குவளைகளை அடுக்கிவைத்துதண்ணீரை கைகளால் கொண்டு சென்று நிரப்பினர்.

நிறைந்தது குவளைகள்மகிழ்ந்தது மனங்கள். சிந்திய நீரைப்போல  சிதறியது துன்பம்”.

கண்ணாமூச்சி

கன்னியின் புகைப்படத்தில், கண்ணைக் கட்டி பொட்டு வைக்கத்தனர். இந்தப் போட்டியில் முன்னாள் மாணவர்கள் பங்கு பெற்றனர். வெற்றியும் பெற்றனர். ஏனென்றால் மனைவிக்கு பொட்டு வைத்து பழகியவர்கள் அல்லவா !

பம்பரப்போட்டி

நூலெடுத்து சுற்றினர்நூறுபேரும் கத்தினர் .

பம்பரத்தை சுழற்றினர், அதன் சுழற்சியிலே சிக்கினர் .

“பம்பரத்தின் அச்சு மனதில் சுற்றியது”

கோலப்போட்டி

“மாதவம்” மன்ற வாசலிலேமாவெடுத்து மாக்கோலம் போட்டனர்

புள்ளிவைத்து பூக்கோலம் போட்டனர்.

கண்ணை கவர்ந்தன மனதை நிறைத்தன.

மேடை விழாக்கள்

முன்னாள் மாணவர் பேரவை அரங்கில்” விழாக்கள் தொடர்ந்தன.

முன்னாள் மாணவர்கள் முன்னால் அமரகல்லூரி மாணவர்கள் தொடர்ந்து அமர விழா மேடையில் பிரமுகர்கள் குத்து விளக்கு ஏற்றி விழா தொடங்கியது.

தமிழ்தாய் வாழ்த்தை தொடர்ந்து வரவேற்புரையை திருமதி வாணி-தலைவர் மாதவம்அவர்கள் வழங்கினார். பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் மன்ற விழாவை சிறப்பாக கொண்டாட உரு துணையாக இருந்த முன்னாள் மாணவர் பேரவைக்கு வாழ்த்தினையும்  நன்றியையும் தெரிவித்தார்.

திரு வாசுதேவன் – தலைவர், முன்னாள் மாணவர் பேரவை அவர்கள் துவக்கவுரையின் போது பொங்கல் விழாவை “மாதவம்” மாணவர்களுடன் இணைந்து நடத்துவதில் பெரும் ஆனந்தமுறுவதாகஉரைத்தார். தமிழ் மன்றம் நிகழ்ச் சிகளுக்கும்வளர்ச்சிக்கும் 1966 வருட மாணவர்கள் சார்பாக ரூ 2.6 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர் திரு. எம்.ஆர். அரங்கநாதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவின் அமைப்பாளர் திரு வி. இரவீந்திரன் மற்றும் இவ்விழாவில் பெரும்பங்கு கொண்ட அவர் சார்ந்த COSSஅமைப்பினரையும்பாராட்டினார் . 

பாடலரங்கத்தில் கல்லூரி மாணவியரின் பாடலைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் திரு ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களும் தம் மலரும் நினைவாக திரைப்பட பாடலைப்  பாடினார்.

கவியரங்கத்தில் மாணவிபவ்யாமாணவர்கள் மகாதேவன்தினகரன் அவர்கள் பொங்கல் கவிதை பாடினர். முன்னாள் மாணவர் திரு கே .பி . சங்கர் அவர்களின் கவிதயை திரு.சேகர் அவர்கள் வாசித்தார். கவிதை மழையில் அனைவரும் நனைந்தனர்.

பட்டிமன்றம்

என்றும் இனிமையாக இருப்பது பள்ளிப்பருவமா அல்லது கல்லூரிப்பருவமா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டி மன்ற  நடுவராக திரு “பூ.கொ. சரவணன்” அவர்கள் இருக்க, “பள்ளிப் பருவமே” என்ற அணியில்  மாணவி காயத்ரிமாணவர்கள் சிபிரிஷி வாதாட ,“கல்லூரிப் பருவமே என்ற அணியில்  மாணவி ப்ரியாமாணவர்கள் வினோத்சிவா வாதாடினர். இரு அணிகளின் பேச்சுக்கள் அவையோர்களின் நெஞ்சங்களில் பட்டு பலத்த கரவொலிகளால் அரங்கமெங்கும் எதிரொலித்தது

பள்ளிப்பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்தின் பழைய நினைவுகளில்முன்னாள் மாணவர்கள் முழ்கிப்போனார்கள். பட்டி மன்ற நடுவர் தனது முடிவுரையில் இரு பருவங்களின் சிறப்புகளை எடுத்துரைத்து,

ஒன்றின் முடிவுதான் அந்த தருணங்களை இனிமையாக்குகிறது. முடிவிலா ஒன்று சலிப்பை ஏற்படுத்தும் என்று கூறிஇருபருவங்களும் இனிமையானவையே என்று தீர்ப்பு வழங்கினார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் ,போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களுக்கும்புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

நிறைவுரையைமுன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மன்றம் பொறுப்பாளர் திரு. வி. இரவீந்திரன் வழங்கினார். அப்பொழுது தமிழ் மன்ற நிகழ்சிகளை இன்னும் சிறப்பாக விவேகனந்தர் கலையரங்கத்தில் நடத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்று கூறினார்.

நன்றியுரையை திரு மோகனபிரசாத்செயலர்- மாதவம்” நவின்றார்.

என்றென்றும் இனிக்கும் நினைவுகளில் ஒன்றாகஅமைந்த பொங்கல் விழா 2018” இனிதே தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

தொகுப்பு  :- வி.இரவீந்திரன்- தமிழ் மன்றம் பொறுப்பாளர்

 

2.  THE FELICITATION FUNCTION FOR STUDENT AUTHORS Held on 1st March 2018 :
The Following Students
KARTHICK PAZHANI (ACT), SHREYAA SENTHIL KUMAR (ACT)PRIYANCA B (ACT), V. ADITHI (CEG),SWESTIKA SENTHIL KUMAR (CEG), MATHANGI KRISHNAN (CEG),   ROOPPESH SARANKAPANI (CEG), SHRADDHA PADMANABHAN (CEG),SUJITHRA RANGANATHAN (SAP), MADHUMATI DHANASEKARAN (CEG),PUGAZHENDI SARAVANAN (CEG), K.MAHADEVAN (CEG).WERE HONORED FOR CONTRIBUTING  WITH THEIR ARTICLE FOR CEG ALUMNI E NEWS. THE PROGRAMME STARTED AT 4.30 PM, THURSDAY MARCH 1, 2018 AT THE ALUMNI CENTRE, COLLEGE OF ENGINEERING, GUINDY, ANNA UNIVERSITY. Dr. Thirunakkarasu presided over the meeting. Er. Vasudevan and  Prof Swaminathan, Prof. Stars Jasmine and Er. Keerthana Chellapan offered their felicitations. Er. Damodaran released the February issue of CEG ALUMNI E NEWS. Er. Prasad was in charge of Awards Distribution to students. Prof. Ramaswamy compered the programme.

Prof. S. V. Ramaswamy Addressing the Audience

President Er. D. Vasudevan honoring the student for Contributing with the article for the E- News

Prof. Swamynathan,  honoring the student for Contributing with the article for the E- News

Prof. Stars Jasmine, honoring the student for Contributing with the article for the E- News

Er. A. G. Damodaram handing over the E – News hard copy to Prof. Swamynathan ( Student Advisor & Faculty, CEG)

 

Er. A. G. Damodaram handing over the E – News hard copy to Prof. Stars Jasmine ( Faculty – English Department, CEG)

 3. Felicitation Function to the GATE Toppers held on 07.03.2018

Report :

In order to motivate the students registered with our AACEG – Gate Academy, AACEG organized a simple function on Wednesday, 7thMarch 2017, 4.30 pm by inviting the GATE toppers in the various Ist  year M.E Branches in CEG,  in the presence of these GATE aspirants. Dr. P. Sakthivel, Secretary, AACEG delivered the welcome address and briefed about the benefits of the GATE.  Er.S. Suryanarayan, Member, AACEG  in his address briefed the students  about the benefits of the GATE and the Opportunities available  in the Public Sector Companies. Er. D. Vasudevan, President, AACEG delivered the presidential address.   Dr. Muttan, HOD of ECE Branch graced the occasion with his presence.  Dr. M. Sekar, Former President and EC Member,  read the names of the GATE Toppers and the Toppers were honored with the mementos. The programme concluded with the Vote of Thanks proposed by Ms. Krishnaveni, 3rd Year Material Science Engineering Student  followed by the High-Tea.

4. Japan Cultural and Sports Festival

Japan Cultural and Sports Festival